இந்தியா
விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87, பெங்களூரில் நேற்று(ஜூலை 14) காலமானார். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கர்நாடகமேலும் படிக்க...
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்

கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர்மேலும் படிக்க...
ஜூலை 25 நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்தமேலும் படிக்க...
நாளை தூக்கு: நிமிஷாவை காப்பாற்ற போராடும் குடும்பம்

கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஏமனில், இந்திய செவிலியரான நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், எந்த எல்லை வரை முடியுமோ, அதுவரை முயற்சி செய்து பார்த்தும், ஒன்றும் செய்ய முடியவில்லை’மேலும் படிக்க...
நீங்கள் அவமானத்தை ஏற்படுத்தவில்லையா? – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் தலைவரும், நடிகருமான விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை, “காவல் நிலைய மரணங்கள்” தொடர்பாக திமுக ஆட்சியை கடுமையாக சாடி பேசியுள்ளார். “விளம்பர் திமுக சர்க்கார் தற்போது மன்னிப்பு கேட்கும் சர்க்காராக மாறிவிட்டது” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும் படிக்க...
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர் அவசர கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசரமாக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழகமேலும் படிக்க...
ஏர் இந்தியா விபத்து வேண்டுமென்றே நிகழ்ந்ததா?

குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில்மேலும் படிக்க...
நெடுந்தீவில் 07 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர். அதன்போது அவர்களின் படகினையும்மேலும் படிக்க...
அகமதாபாத் விமான விபத்திற்கு எரிபொருள் விநியோக வால்பு அடைப்பே காரணம்

இந்தியாவின் அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று வெளியானது. அதன்படி, விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணைமேலும் படிக்க...
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மோடி: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்தால் சலசலப்பு

பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ஓய்வு பெறப்போகிறாரா என்று ஒருதரப்பினர் மீண்டும் பேசவும் விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர். இதனால் டெல்லி அரசியல் களத்தில் திடீரென சலசலப்பும் பரபரப்பும் நிலவுகின்றன. பாஜகவின் தோழமை அமைப்புகளில் ஒன்றான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்மேலும் படிக்க...
தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி?

பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனத் தமிழக வெற்றிக் கழகம் உறுதியளித்துள்ளது. மக்களால் வெறுக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை எனச் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்மேலும் படிக்க...
விஜய்யுடன் அரசியல் செய்வது கடினம்- சீமான்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யை பொறுத்தவரையில் அவர் பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுள்ளதால், அவருடன் அரசியல் செய்ய முடியாது என சீமான்மேலும் படிக்க...
குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம்; 09 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு

குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது. இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் பலர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள்மேலும் படிக்க...
கச்சத்தீவு இந்தியாவிற்கே சொந்தம் – ஹிந்து மக்கள் கட்சித் தலைவர்

கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தஞ்சாவூரில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டிலும், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தாண்டுமேலும் படிக்க...
உயிர் தப்பிய 175 பயணிகள்

பீஹார் மாநிலம், பாட்னாவிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பாட்னாவிலிருந்து 175 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியதையடுத்து, விமானத்தை விமானி பத்திரமாகத்மேலும் படிக்க...
போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் இவர்கள் பிணை கோரிமேலும் படிக்க...
தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07) திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர்மேலும் படிக்க...
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு

”ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பாடசாலை வான் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சாரதி மேலும் படிக்க...
செம்மணி விடயத்தில் தமிழினம் கொதித்தெழ வேண்டும் – ரி.ராஜேந்தர்

செம்மணியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்படுவது தொடர்பில் தென்னிந்திய இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் கருத்து வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அந்தப் பகுதியில் இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், மயானத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும் தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும்மேலும் படிக்க...
செம்மணியில் புதைக்கப் பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 173
- மேலும் படிக்க