இலங்கை
யாழில் சீரற்ற வானிலையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிப்பு ; 9 வீடுகள் பகுதியளவில் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரகால மழையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வதுமேலும் படிக்க...
புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு- வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச வருமான இலக்கு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 02 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்கமேலும் படிக்க...
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்-களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அனுமதி

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (24) இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார். அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவுமேலும் படிக்க...
2025 இன் முதல் பத்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை விஞ்சியது

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட அதிகமாகும். இலங்கை ஏற்றுமதிமேலும் படிக்க...
என்.பி.பி. அரசுக்கு எதிராக இரு முனை தாக்குதல்: எதிரணிகள் வியூகம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை தனித்தும், கூட்டாகவும் முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன உள்ளிட்ட எதிரணியிலுள்ள சில கட்சிகள் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் நுகேகொடையில் கடந்த 21மேலும் படிக்க...
வவுனியாவில் தீப்பரவல்

வவுனியா – கொரவப்பத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று காலை 9. 45 மணியளவில் தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்தது. காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம்மேலும் படிக்க...
தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமானது – பிமல் ரத்நாயக்க

கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ஞாயிற்றுக்கிழமை (23) நாட்டப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் பிரதேசமேலும் படிக்க...
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்

இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துக்மேலும் படிக்க...
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஹேமசிறி, பூஜித்த மீதான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 ஜனவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறுமேலும் படிக்க...
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சமாதானப் படையணி (Peace Corps) கல்வி மற்றும்மேலும் படிக்க...
டில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் போராட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.மேலும் படிக்க...
க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CID யில் முறைப்பாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளியல்மேலும் படிக்க...
கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த அனர்த்தம் காரணமாகமேலும் படிக்க...
நீண்ட கால தடுப்புக் காவலுக்கு புதிய சட்டம் வருகிறது

தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்பத்திரங்களை சமர்பிக்கவும், நீண்ட காலம் தடுத்து வைப்பதற்குமான புதிய சட்டமூலத்தை சமர்பிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது. அதன்படி புதிய சட்டமூலத்தை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகமேலும் படிக்க...
யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்

யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்து சேவை திங்கட்கிழமை (24) முதல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் அதிகாலை 5.00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் ஆகிய இரண்டு நேரம் இ.போ.ச பஸ் சேவைமேலும் படிக்க...
மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு. – கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே

மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். அக்வா பிளான்ட் இலங்கைமேலும் படிக்க...
இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள் ; தமிழீழத் தேசியக்கொடி தின நிகழ்வில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர்மேலும் படிக்க...
மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். அடுத்த பேரணி இரத்தினபுரி,மேலும் படிக்க...
அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 405
- மேலும் படிக்க

