இலங்கை
பாகிஸ்தான் பிரதமருடனான முஸ்லிம் தலைவர்களின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹலியா ரம்புக்வெல்ல இன்றுமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிய 84 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடி வந்த 84 உறவுகள் இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்துள்ளனர். வடக்குக் கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், தமது பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை நீண்ட காலமாகமேலும் படிக்க...
நள்ளிரவில் இளம் பெண் கடத்தப்பட்டார்
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெள்ளைவான் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் யுவதியொருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தலைமையிலான குழுவினரேமேலும் படிக்க...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு தொடர்பாக கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாது – திஸ்ஸ விதாரன
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில்மேலும் படிக்க...
இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை- கதிர்
இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு, இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இம்முறை கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக இடம்பெறவுள்ளது. தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். இன்றைய முதல்நாள் அமர்வில் மேலும் படிக்க...
பொத்துவில் – பொலிகண்டி பேரணி குறித்து சுமந்திரனிடம் வாக்குமூலம் பதிவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் (திங்கட்கிழமை) இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சுமந்திரன்மேலும் படிக்க...
குருந்தூரில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சிங்கள இலக்கியங்களே சாட்சி – யாழ். பல்கலை பேராசிரியர்
குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ். பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சின்னக் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். சுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சிறுவன் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஐந்து மணியளவில்மேலும் படிக்க...
ஐ.நா.வின் முதல் வரைபு கடும் ஏமாற்றம் அளிக்கிறது: அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்- சி.வி.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபையிட்டு, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக்மேலும் படிக்க...
தமிழர்கள் இனவழிப்புக்கு ஆளாவதற்கு ஐ.நா.வும் காரணம்: செல்லமாக அணுகும் பிரேரணைகள் வேண்டாம்- அனந்தி
யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் தலையிடவேண்டிய ஐக்கிய நாடுகள் சபை, தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவியிருந்த நிலையில் தமிழர்கள் மீதான இனவழிப்புக்கு ஐ.நா.வும் காரணம் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
யாழில் ‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வு
‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கட்சிகள் இணைவில் உருவாகிறது ‘தமிழ் தேசியப் பேரவை’!
தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்மேலும் படிக்க...
10 தமிழ் கட்சிகள் மீண்டும் சந்திப்பு – கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராய்வு
தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் 10 தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மீண்டும் ஒன்று கூடவுள்ளன. இதன்போது ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராயப்படவுள்ளது. அத்தோடு, தமிழ்மேலும் படிக்க...
சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் தகைமை அரசாங்கத்துக்கு உள்ளது – தினேஸ் குணவர்தன
சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா உலகப் பரவல் தொற்று காரணமாக, வரலாற்றில்மேலும் படிக்க...
இணை அனுசரணை நாடுகள் நிறைவேற்ற உள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை- கஜேந்திரகுமார்
ஐ.நா.மனித உரிமை பேரவையில் இணை அனுசரணை நாடுகள் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகளால் ஐ.நா. ஆணையாளருக்கு கடிதம் அனுப்பிவைப்பு!
வடக்குக் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி’ என்ற தலைப்பிடப்பட்டு இன்று (சனிக்கிழமை) இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
அரச இயந்திரத்தால் ஒருமித்த நாடு: மனதளவில் இரண்டு நாடுகள்- ஸ்ரீதரன் சுட்டிக்காட்டு
அரச இயந்திரத்தால் ஒருமித்த நாடாகவும் மனதளவில் இரண்டு நாடுகளாகவும் இலங்கை இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமைக்காக கிளிநொச்சி பொலிஸாரினால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில்மேலும் படிக்க...
வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா: நெல்லியடிச் சந்தை வியாபாரிக்கும் தொற்று!
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (வெள்ளிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் நெல்லியடி பொதுச் சந்தை வியாபாரியென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 279
- 280
- 281
- 282
- 283
- 284
- 285
- …
- 435
- மேலும் படிக்க
