இலங்கை
சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜி லிங்கம் முக்கிய கோரிக்கை
சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம், கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈகச்சுடரினையும் ஏற்றி அஞ்சலிமேலும் படிக்க...
இலங்கை மற்றும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு
இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாகமேலும் படிக்க...
இறந்தவர்கள் அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள்- சி.வி
இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதையே தற்போதைய பொலிஸாரின் செயல் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து அவர்மேலும் படிக்க...
தமிழர் தாயக ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டும் “தாய்நிலம்” ஆவணப்படும் இன்று வெளியீடு
தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பை எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்’ என்ற ஆவணப்படம் இன்று சனிக்கிழமை லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவணமேலும் படிக்க...
கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம் – கஜேந்திரகுமார்
தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கொடுக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறுகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்மேலும் படிக்க...
பாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை
பாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து தொழிநுட்ப குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. குறித்த குழுவினால் எடுக்கப்படும் தீர்மானத்துக்கமைய, பாடசாலையை மீளமேலும் படிக்க...
நினைவேந்தல் உரிமையை மறுப்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும் – சிவாஜிலிங்கம்
நினைவேந்தல் உரிமையை மறுப்பது என்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும் என தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் படிக்க...
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய இந்தமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று(வியாழக்கிழமை) அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகமேலும் படிக்க...
மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் – விசேட சந்திப்பு இன்று
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பனமேலும் படிக்க...
நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலையின் நினைவேந்தல்!
யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் மீது 1995ஆம் ஆண்டு விமானப்படை மேற்கொண்ட குண்டு வீச்சுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் தமிழ்த் தேசியக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள்மேலும் படிக்க...
வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது – ஜனாதிபதி
வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
மன்னாரின் மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் கொரோனா தொற்றால் காலமானார்!
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 80ஆவது வயதில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு உயிரிழந்தார்.மேலும் படிக்க...
அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கவுள்ளார். கடந்த 12 ஆம் திகதிமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப் படும் என ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறுமேலும் படிக்க...
ரோம் சாசனம்- சுமந்திரனிடம் தமிழர் தாயக சங்கம் முக்கிய கோரிக்கை
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால்மேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரை!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமானது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்துமேலும் படிக்க...
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் – பல திருத்தச் சட்டங்கள் முன்வைப்பு

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இந்தவார நாடாளுமன்றக் கூட்டத்தொடரினை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்துவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, இன்றும் நாளையும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அதனடிப்படையில், கட்டளைகள் மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- …
- 437
- மேலும் படிக்க
