இலங்கை
பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவைப் பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலானமேலும் படிக்க...
ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார். யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் 2மேலும் படிக்க...
உலக பொருளாதார மன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு

உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும்மேலும் படிக்க...
உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தைப்பொங்கல்’

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்மேலும் படிக்க...
கல்விச் சீர்திருத்தத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றாதீர்கள் – கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் சங்கம்

கல்வியை வெறும் அரசியல் பிரச்சினையாக மாற்றாமல், தேசத்தின் எதிர்காலம் குறித்த தேசிய பொறுப்பாகக் கருதி, நேர்மறையான அணுகுமுறையுடன் இந்தச் சீர்திருத்தச் செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பு

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 06 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, அவற்றை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தேசியமேலும் படிக்க...
கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப் பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது. நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ இயக்குநரை நீக்கக் கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு நியமிக்கக் கோரியும் இந்த வேலைநிறுத்தம்மேலும் படிக்க...
கூரிய ஆயுதத்தால் பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். 12.01.2026 மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். எனினும், குறித்த மோட்டார் சைக்கிள்மேலும் படிக்க...
‘Rebuilding Sri Lanka’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில்மேலும் படிக்க...
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போது மொத்தம் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலக்கட்டத்தில் மொத்தம் 888 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான நபர்களில் எட்டுமேலும் படிக்க...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (13) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகொன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைதான மீனவர்கள் படகுடன்மேலும் படிக்க...
நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார். திருமதி ஜூலி சாங்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார்மேலும் படிக்க...
சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்

இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும் பாதுகாப்பு விவகார ஆய்வுத்துறையின் ஜாம்பவானுமான (Iqbal Athas) இக்பால் அத்தாஸ் இன்று (13) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 81 ஆகும். தெஹிவளையில் உள்ள கிராண்ட் மசூதி மயானத்தில் இன்று பிற்பகல் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்மேலும் படிக்க...
உயர்தரப் பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்

டித்வா’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன. குறித்த பரீட்சைகள் 12.01.2026 முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகாமேலும் படிக்க...
கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமேலும் படிக்க...
ஜனவரி முதல் எட்டு நாட்களில் 67,762 சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 11,367 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைமேலும் படிக்க...
புதுக்குடியிருப்பில் T56 ரவைகளுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 438
- மேலும் படிக்க

