இலங்கை
அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் முதலில் போராட்டத்தில் இறங்குவார்கள் – விவசாய சங்கம் எச்சரிக்கை

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பதை வேண்டுமென்றே தாமத்துவதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராகமேலும் படிக்க...
துப்பாக்கிச் சூட்டில் 2 இந்திய மீனவர்கள் காயம் – இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பு

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த மைத்திரிபால சிறிசேன
மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல், அனுராதபுரம் மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய்களை அவசரமாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது வடமேற்கு மற்றும் அனுராதபுரம் பிராந்தியங்களில் விவசாயத்தை மேம்படுத்த உதவும் என்றும் முன்னாள்மேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநருக்கும் நியூஸிலாந்து தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம்மேலும் படிக்க...
பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி
எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் இந்தப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. குறைந்தமேலும் படிக்க...
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்தது. சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்தமேலும் படிக்க...
கடற்படையின் துப்பாக்கி இயங்கியதில் இரு இந்திய மீனவர்கள் காயம்
சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்களைக் கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியின்போது, இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்டிருந்தமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவரின் குறும்படம் வெளியீடு

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தினரின் இயக்கம் மற்றும் படப்பிடிப்பில் உருவான ‘THE WAY – Target Locked’ என்ற குறும்படம் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி சபாலிங்கம் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் இ.செந்தில்மாறன்மேலும் படிக்க...
இன்று முதல் கைத்தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை பதிவு செய்ய வேண்டும்

இன்று செவ்வாய்க்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRCSL) சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண் பதிவுசெய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைமேலும் படிக்க...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்திய சாலையில் அனுமதி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்புமேலும் படிக்க...
தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது

தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது என என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்து்ள அவர், “இன்று காலை 8.45 மணியளவில்மேலும் படிக்க...
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ரூ.20 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சுங்கம் வசம்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கியுள்ளன. டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்துமேலும் படிக்க...
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தனியார் மயமாக்கலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதை அல்லது தனியார்மயமாக்கலைத் தடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக அதை தொடர்ந்தும் நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல்மேலும் படிக்க...
சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒத்திகைகள் காரணமாகச் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த பகுதியில் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை காலைமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.ம.ச.வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியடையும் – ஐ.தே.க. பொதுச் செயலாளர் தலதா நம்பிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. நாங்கள் இரண்டு தரப்பினரும் பிரிந்து செயற்பட ஆரம்பித்ததாலே தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சிக்கு வரமேலும் படிக்க...
ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கேத்தரின் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் , இன்று திங்கட்கிழமை (27) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமசூரியவை சந்தித்தார். இந்த சந்திப்பில், வறுமைமேலும் படிக்க...
கடந்த அரசாங்கத்தில் மூடி மறைக்கப்பட்ட அனைத்து குற்ற விசாரணைகளும் முறையாக நடத்தப்படும் – ஜனாதிபதி

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மூடிமறைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம்மேலும் படிக்க...
புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள் இருந்தால் நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள் ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் அரசாங்கம் வலியுறுத்தல்
மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- …
- 439
- மேலும் படிக்க


