Main Menu

இந்தோனேசியா-வில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்து சமுத்திரத்தில் இன்று (17) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் தற்போது இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்புக்கு அமைவாக இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது அதிகாரம் பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்டது என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.