Main Menu

புலியைப் கூண்டிலிருந்து விடுவிக்கக் கோரிய TIK TOK பிரபலம் – இளைஞர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் லாகூர் மாவட்டத்தில், டிக்டொக் காணொளி ஒன்றைப் பதிவு செய்வதற்காகக் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட புலி தாக்கியதில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லாகூர் மாவட்டத்தின் கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் விலங்கு இனப்பெருக்க நிலையம் ஒன்றில் குறித்த இளைஞர் பணியாற்றி வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலியின் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், பண்ணையின் உரிமையாளர் ஃபையாஸ் மற்றும் நொமான் என்ற டிக்டொக் காணொளி உருவாக்குநர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின்படி, காணொளி ஒன்றைப் பதிவு செய்வதற்காகக் குறித்த இடத்திற்குச் சென்ற டிக்டொக் காணொளி உருவாக்குநர், புலியைக் கூண்டிலிருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து கூண்டிலிருந்து வெளியேறிய புலி கட்டுப்பாட்டை இழந்து, அங்கு பணியாற்றிய இளைஞரைத் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.