இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் சீன வலைதள பிரபலங்களுக்கு மத்திய அரசு கண்டனம்
சீனாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வ்லாக்கர்கள் மற்றும் நேரலை ஒளிபரப்பாளர்கள் (சமூக வலைத்தள பிரபலங்கள்) வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதிகளை டெல்லியின் பகுதிகள் என்று தவறாகக் குறிப்பிட்டு வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் இந்தியாவின் வாழ்க்கை நிலை, சுகாதாரம், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வறுமை குறித்து இழிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசும்போது, “வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானவை. தவறான கதைகளைப் பரப்புவது, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் நம்பகத்தன்மையை மட்டுமே குறைக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
