Main Menu

தமிழக நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வனவில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) பெயரில் ஆறு மாவட்ட நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக  சில மாதங்களுக்கு முன்பே தமிழக    அரசிடம்  சிலா்  முறைப்பாடு செய்துள்ளமை  தற்போது தெரியவந்துள்ளது.

கோவை பெரியாா் அறிவுலகத்துக்காக போலி பதிப்பகங்கள் மூலம் ஆயிரக்கணக்கான நூல்கள் வாங்கப்பட்டதாகவும், இதில் பல்வேறு ஊழல்கள் மறைந்திருப்பதாகவும் எழுத்தாளா் பெருமாள் முருகன்  குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக, தவறான தகவல்களைக் கொண்ட தரமற்ற புத்தகங்கள், கேலிக்குரிய வகையிலான நூலாசிரியா் பெயரில் அச்சிடப்பட்டு மாநிலத்தின் முக்கிய நூலகங்களுக்குள் வைக்கப்பட்டிருப்பது வாசிப்பு பழக்கம் கொண்ட அனைவரையும் அவமதிக்கும் செயல் என விமசர்கள்  தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பபாசி பெயரில் யாரோ சிலா் பாடசாலை  கல்வித் துறை, நூலக ஆணையா், உயா் கல்வித் துறை, அரசுத் துறை செயலா்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முறைப்பாட்டு  கடிதம் அனுப்பியுள்ளனா்.

அதில் கோவை, திருச்சி, திருப்பத்தூா், தென்காசி உள்பட 6 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய நூலகங்களுக்காக வாங்கப்பட்ட புத்தகங்களில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அதில் ஒரு முகவரி தவறாக இருந்ததால், எதேச்சையாக அந்த கடிதம் பபாசி அலுவலகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அதனை  தொடர்ந்து குறித்த சம்பவம்   தொடா்பில் பொலிஸ்  ஆணையாளரிடம் முறைப்பாடு  செய்யப்பட்டதுடன் அது தொடர்பில் தற்போது   விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது .