Main Menu

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விசேட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இன்று (6) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அதிகரித்துள்ள பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு 200 இற்கும் மேற்பட்ட மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இந்த விசேட போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.