பிணை வழங்கியும் சிறையிலிருந்து வெளியேற முடியாத ரோஹித போகொல்லாகம
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனமையால், பிரதிவாதியான போகொல்லாகம மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
