அமெரிக்க இடைத்தேர்தல் : வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினப் பெண்ணொருவர் ஆளுநராக தகுதி
அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கறுப்பினப் பெண்ணொருவர் வெற்றி பெற்றுள்ளமை வரலாற்றுப் பதிவாகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (3) நடைபெற்றதையடுத்து, தற்போது வாக்குகளின் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், குடியரசுக் கட்சியை பின்தள்ளி, ஜனநாயகக் கட்சி முன் நிற்கிறது. இந்நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட கறுப்பினப் பெண்ணான கேஷா லான்ஸ் அமோக வெற்றி பெற்று, ஜோர்ஜியா மாகாணத்தின் ஆளுநராவதற்கான தகுதியினைப் பெற்றுள்ளமை வரலாற்றில் முதல் முறை நிகழும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இவர் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிச் ஜாக்சனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
