Main Menu

கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்

ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே (Óscar Puente ) பதவி விலகியுள்ளார்.

அந்த நாட்டில் அதிவேக ரயில் மோதிய விபத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்த ஆறு நாட்களுக்குப் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தலைநகர் மாட்ரிட்டிற்குத் தெற்கே உள்ள உர்தா நகருக்கு அருகில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த விபத்து குறித்து சாட்சியமளித்த பின்னர், அவர் தனது முடிவை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அந்த விபத்தில், நின்றுகொண்டிருந்த ஒரு ரயிலின் பின்புறத்தில் மற்றொரு ரயில் மோதியிருந்தது.

கடந்த வாரம் நிகழ்ந்த விபத்து, ஐரோப்பாவின் நவீன வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும்.

மேலும், 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஸ்பெயினில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தும் இதுவேயாகும்.

செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நீண்ட நாடாளுமன்ற அமர்வின் முடிவில் புயென்டே தனது முடிவை அறிவித்தார்;

அந்த அமர்வின்போது அவர் புதிய ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துரைத்ததுடன், எதிர்க்கட்சியினரின் கடுமையான கேள்விகளுக்கும் ஆளாளமையும் குறிப்பிடத்தக்கது.