பொருளாதார நடவடிக்கை-களுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தின் சிறப்பு அறிவித்தல்
2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் 8 வகையான பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ (வரி அடையாள இலக்கம்) இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் பலரும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும் பிராந்திய அலுவலகங்களுக்கும் செல்வதற்கு முயற்சி செய்து வருவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நந்தன குமார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தமக்கு இந்தப் பொருளாதார நடவடிக்கைகளுக்காக TIN இலக்கம் உண்மையிலேயே அவசியமானவர்கள் மட்டுமே இந்தத் தருணத்தில் அதனைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஏனைய நபர்களுக்கும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதுடன், இதுவரை TIN இலக்கம் பெறாதவர்கள் முறையான வழிகளில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், இந்தத் தருணத்தில் ஏற்கனவே சிலருக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க முடியும் எனவும், அதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வலைத்தளத்திற்குப் பிரவேசித்து, உங்களது கைப்பேசி இலக்கம் ஊடாக ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை (OTP) அனுப்பி உங்களுக்கு ஏற்கனவே TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
