Main Menu

இஸ்ரேலில் மீண்டும் ஒரு தேர்தலுக்குச் செல்ல வேண்டாம் : இஸ்ரேலிய ஜனாதிபதி

இஸ்ரேலில் மீண்டும் ஒருமுறை பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைத் தவிர்த்து, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு இஸ்ரேல் ஜனாதிபதி அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி, பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலையில் உள்ளபோதிலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை அவர்களால் இன்னும் பெற முடியவில்லை.

இதன் காரணமாக மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், மீண்டும் ஒரு தேர்தலுக்குச் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணுமாறு கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.