ஷிரந்தி ராஜபக்ஷ வைத்திய சாலையில் அனுமதி
தற்போது வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷ இதற்கு முன், ஒக்டோபர் 9 அன்று சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் சிறைக் காவலுக்கு மாற்றப்பட்டார்.
கண் தொடர்பான பாதிப்பு காரணமாக, ஒக்டோபர் 8 அன்று அவர் சிறை மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், ‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியக் கணக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவினரால் (FCID) தான் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் முன்னதாக நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
