சுற்றுலா பயணிகளை அழைத்துவர சென்ற பேருந்தில் தீ
திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினரை அழைத்து வருவதற்காக கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று (11) அதிகாலை தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளது.
ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்க பங்குவ பகுதிக்கு அருகிலுள்ள 144 ஆவது கிலோமீட்டர் மைல்கல் அருகில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெறும் போது பேருந்தில் சாரதியும் நடத்துநரும் மாத்திரம் இருந்ததாகவும், அவர்கள் இருவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்காகப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
