Main Menu

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

பிரதிசபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.30 – பி.ப. 5.00 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன,

(i) தியகம வனத்தைப் பாதுகாத்தல் ((கலாநிதி) ஹர்ஷ த சில்வா).

(ii) புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல் (கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து).

(iii) 1983 ‘கறுப்பு ஜூலை’ யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல் (அமிர்தநாதன் அடைக்கலநாதன்).

(iv) வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல் (லசித் பாஷண கமகே).

(v) இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல் (சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி).

(vi) நுண் நிதிக் கடன்களைப் பெற்று அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (சமிந்த விஜேசிறி).

(vii) இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல் (ரவி கருணாநாயக்க).

பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)