Main Menu

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காகப் போகொல்லகம இன்று (07) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.

விசாரணையாளர்கள் அவரிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.