சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – எதிர்க்கட்சியினர் கையெழுத்து
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (08) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த கையெழுத்திடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.
