Day: October 8, 2026
இலங்கை சுங்கத்தின் அதிரடி உத்தரவு – எதிர்வரும் 19 முதல் இறக்குமதியாளர்-களுக்குப் புதிய கட்டுப்பாடு

சுங்க நடவடிக்கைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் இறக்குமதி ஆவணங்களைக் கைமுறையாக சமர்ப்பிக்கும் நடைமுறை முற்றாக நிறுத்தப்படுவதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து இறக்குமதியாளர்களும் அன்றைய தினத்திற்குள் கட்டாயமாகத் தங்களது டிஜிட்டல் கையொப்பத்தைமேலும் படிக்க...
பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலாவுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று காலிப் பகுதிக்கு, மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர் ஒருவர்மேலும் படிக்க...
ஷிரந்தி ராஜபக்ச தனியார் மருத்துவ மனைக்குச் செல்ல அனுமதி மறுப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய, அவர் நாளை (09) தேசியமேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுதலை

வாகன விபத்துத் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுவிக்கப்பட்டார். ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பனாகொடை பகுதியில் நேற்று (07)மேலும் படிக்க...
சவுதியில் அதிர்ச்சி தாக்குதல்: இரு விமான நிலையங்கள் இலக்கு; 3 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவின் அப்ஹா மற்றும் கிங் காலித் சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இத்தாக்குதல்கள்மேலும் படிக்க...
கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்

23 இந்தியக் கப்பல் பணியாளர்களைக் கொண்ட, லைபீரியக் கொடியை ஏந்திய எண்ணெய்க் கப்பல் ஒன்று, ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரைப் பகுதியில் ட்ரோன் படகுகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக மொஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, கப்பல் குழுவினர் காப்பாற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக ரஷ்யப்மேலும் படிக்க...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – எதிர்க்கட்சியினர் கையெழுத்து

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (08) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த கையெழுத்திடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, எதிர்க்கட்சியைமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்மேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தை (CCIB) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் தற்போது கொழும்புமேலும் படிக்க...
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது

இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு, சவுதி அரேபியா விதித்துள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டானது முற்றாக கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளதுமேலும் படிக்க...

