Main Menu

ஞானசார தேரருக்கு பகிரங்க பிடியாணை – நாட்டை விட்டு வெளியேறவும் தடை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.
அத்துடன், ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஏற்கனவே கடந்த 2 தினங்களாக ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பகிரங்க பிடியாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.