Day: October 1, 2026
“கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ” : காயமடைந்த நிலையிலும் பயணிகளைக் காப்பாற்றிய விமானியை பாராட்டிய பிரதமர் மோடி

கூரான ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையிலும், ஆபத்தான சூழலில் 174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலையும் மன உறுதியையும் பாராட்டிய பிரதமர் மோடி,மேலும் படிக்க...
ஜப்பானில் வெளி நாட்டினருக்கான நிரந்தர வதிவிடக் கட்டணம் 20 மடங்காக அதிகரிப்பு

ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான நிரந்தர வதிவிட அனுமதி உள்ளிட்ட சில குடிவரவு தொடர்பான கட்டணங்களை 20 மடங்கு வரை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
ஞானசார தேரருக்கு பகிரங்க பிடியாணை – நாட்டை விட்டு வெளியேறவும் தடை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. அத்துடன், ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்புமேலும் படிக்க...
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் 4 மணிநேரம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள்மேலும் படிக்க...
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட்மேலும் படிக்க...
ரணிலின் மெய்ப் பாதுகாவலரை தாக்கிய ஔிப்பதிவாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதிமேலும் படிக்க...
இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என்ற ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
டெல்லி முதலமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, நேற்று (30) டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சந்திப்பில் டெல்லி மாநிலக் கல்வி அமைச்சர்மேலும் படிக்க...
மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் – குடும்பத்தினரின் பெயரிலும் அர்ச்சனை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி வழிபட்ட தமிழக முதலமைச்சர் விஜய், தனது பெயரிலும் குடும்பத்தினரின் பெயரிலும் அர்ச்சனை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டம்பர் 28ஆம் திகதி மதுரை சென்றமேலும் படிக்க...

