Main Menu

12 தமிழக மீனவர்களை இலங்கை விடுவிப்பு

ராமேசுவரம் பாம்​பன் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்​குச் சென்ற டேவிட் என்​பவரது விசைப்​படகை இலங்கை கடற்​படை​யினர் ரோந்து பணி​யின்​போது சிறைப்​பிடித்​து, அப்​படகி​லிருந்த 12 மீனவர்​களை, கடந்த பிப்​.23-ம் தேதி கைது செய்​தனர். அவர்​கள் மீது எல்லை தாண்டி மீன்​பிடித்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின்​கீழ் குற்​றப்பத்​திரிகை தாக்​கல் செய்து வெளிச்சுரா சிறை​யில் அடைத்​தனர்.

இந்நிலையில்​மீனவர்​களின் காவல் நேற்றுடன் நிறைவடைந்​ததை தொடர்ந்​து, 12 பேரும் வெளிச்​சுரா நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். அவர்களை, மீண்​டும் இலங்கை கடற்​பரப்​புக்குள் அத்​து​மீறி நுழைந்தால் அபராதம், சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்​தனையுடன் விடு​தலை செய்து நீதிபதி உத்​தர​விட்​டார்.