Main Menu

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: சமநிலையில் முடிந்த பிரேசில் – மொரோக்கோ ஆட்டம்

2026 ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் ‘C’ பிரிவில் நடந்த விறுவிறுப்பான லீக் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் முடித்துள்ளன.

போட்டி தொடங்கிய முதலே இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆக்ரோஷமாக விளையாடினார். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் நட்சத்திர வீரர்  Ismael Saibari ஒரு அற்புதாமான கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரேசில் அணி, பதிலடி கொடுக்க கடுமையாகப் போராடியது.

அதன்பின், ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் முன்னணி வீரர்  Vinícius Júnior அசத்தலாக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை இரு அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்களும், கோல்கீப்பர்களும் திறம்பட முறியடித்தனர். இறுதிவரை வேறு கோல்கள் எதுவும் அடிக்கப்படாததால் ஆட்டம் சமனிலையில் முடிந்தது.

இதன் மூலம் இரு அணிகளும் தலா 1 புள்ளியைப் பகிர்ந்து கொண்டுள்ளன.