Main Menu

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்

இந்த கோடையில் நடைபெறவிருக்கும் ஃபிபா உலகக் கிண்ணத்துக்கான தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் 26 பேர் கொண்ட அணியில் பிரேசில் முன்கள வீரர் நெய்மர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது பிரேசிலின் சாண்டோஸ் அணிக்காக விளையாடும் 34 வயதான இவர், 128 போட்டிகளில் 79 கோல்கள் அடித்து அந்நாட்டின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ளார்.

ஆனால், காயங்களால் அவதிப்பட்டு வருவதால், 2023 ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணிக்காக நெய்மர் விளையாடவில்லை.

அணியில் இடம்பிடித்ததன் மூலம், அவர் தனது நான்காவது ஃபிபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்கிறார்.

இதற்கு முன்னர் அவர் 2014, 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பிரேசில் அணிக்காக விளையாடியுள்ளார்.

பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒரு விழாவில் இத்தாலியரான அன்செலோட்டி தனது அணியை அறிவித்தார்.

மேலும் நெய்மரின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் 48 அணிகள் பங்கேற்கும் ஃபிபா உலகக் கிண்ணத் தொடர் ஜூன் 11 அன்று தொடங்குகிறன.

இதில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, ஜூன் 13 அன்று மொராக்கோவுடனும், ஜூன் 20 அன்று ஹெய்ட்டியுடனும், நான்கு நாட்கள் கழித்து குரூப் சி பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்கொட்லாந்துடனும் மோதுகிறமை குறிப்பிடத்தக்கது.