விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைதான 22 பிக்குகளுக்கும் தடுப்பு காவல்
விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (26) பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது அவர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.
