Main Menu

பிரிட்டனில் முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்

பிரிட்டனில் உள்ள இரண்டு முக்கிய ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள், AA மற்றும் BSM, “டிரிப் பிரைசிங்” (Drip Pricing) எனப்படும் தவறான கட்டண முறையை பயன்படுத்தியதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது

Competition and Markets Authority (CMA) வெளியிட்ட தகவலின்படி, இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்த்து 80,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெறும் ஓட்டுநர்களுக்கு £760,000க்கும் அதிகமான தொகையை திருப்பிச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும், நுகர்வோர் சட்டத்தை மீறியதற்காக AA நிறுவனத்திற்கு £4.2 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

CMA தெரிவித்ததாவது, ஆன்லைனில் ஓட்டுநர் பயிற்சி முன்பதிவு செய்யும் போது, பயனர்களுக்கு முழு கட்டண விவரம் ஆரம்பத்திலேயே காட்டப்படவில்லை. அதன் பதிலாக, கட்டாயமாக செலுத்த வேண்டிய £3 கட்டணம் பின்னர் சேர்க்கப்பட்டது. இது “டிரிப் பிரைசிங்” என்ற சட்டவிரோத நடைமுறையாக கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கை, CMA தனது புதிய அமலாக்க அதிகாரங்களை பயன்படுத்தி விதித்த முதல் பெரிய நிதி அபராதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், நுகர்வோர் உரிமைகள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், நிறுவனங்கள் விலைகள் குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது