Main Menu

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு

கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதான ஹம்சா இக்பால், 19 வயதான ரேஹான் கான் மற்றும் பிரிட்டிஷ்-பாகிஸ்தான் இரட்டைக் குடியுரிமை பெற்ற 17 வயது சிறுவன் ஆகிய மூவர் மீது சொத்துக்களைச் சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ வைத்தது மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதைப் பொருட்படுத்தாமல் இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 23 ஆம் திகதி அதிகாலை வேளையில் கோல்டர்ஸ் கிரீனில் உள்ள ஒரு யூத வழிபாட்டுத் தலத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஹட்சோலா அமைப்புக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கிழக்கு லண்டனில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் கடந்த புதன்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டதாக லண்டன் பெருநகர காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 45 மற்றும் 47 வயதுடைய இரண்டு ஆண்கள் இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் மாத இறுதி வரை பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.