ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா
மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கின்றது .
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பெருநிறுவனச் செலவுகள் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என மெட்டா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது . மெட்டாவின் 20 % ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதி வரை, மெட்டா நிறுவனத்தில் சுமார் 79,000 ஊழியர்கள் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் செயற்கை நுண்ணறிவு எனும் ‘ AI தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால், பணியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வேலையிழக்கும் அபாயகரச் சூழல் பணிச்சந்தையில் உருவாகியுள்ளது .
