Main Menu

டிட்வா புயலால் நூறிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்

டிட்வா புயல் காரணமாக 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

குறித்த சிறுவர்களை பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய
பிரிதொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்கள் இல்லாத பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு பலர் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் சிறுவர்கள் குறித்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி, நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பதுளை மாவட்டத்தில் குறைந்த வயதில் தாய்மையடையும் இளம் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவ்வாறான நிலைக்கு முகம்கொடுப்பவர்களுக்கு தேவையான பராமரிப்பை வழங்க உரிய இடம் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதுடன் பெற்றோர்களினால் பிள்ளைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.