Main Menu

பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில், 300 தொகுதிகளில் சுமார் 127.6 மில்லியன் பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் கடந்த வருடம் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளும் ஒருமித்து இணக்கம் கண்ட ஜூலை சாசனத்துக்கான வாக்குப்பதிவும் குறித்த திகதியில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, வாக்காளர்கள் இரண்டு வாக்குகளையும் ஒரே நேரத்தில் செலுத்தவுள்ளதால், வாக்கு பதிவு நேரம் ஒரு மணித்தியாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...