Day: December 12, 2025
‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு

டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மீட்பு முயற்சிகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்புமேலும் படிக்க...
பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், 300 தொகுதிகளில் சுமார் 127.6மேலும் படிக்க...
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில், சுமார் 20 கிலோமீற்றர் (12 மைல்)மேலும் படிக்க...
இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்து இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த மிகப்பெரிய செயல்பாட்டு சரிவுக்குப் பின்னால் பணியாளர் பற்றாக்குறையே காரணம் என்றுமேலும் படிக்க...
நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாமேலும் படிக்க...
ரயில் சேவையில் பெண்கள் – ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளார். இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்துமேலும் படிக்க...
இலங்கையின் கோரிக்கைக்கு ஐ.எம்.எப் முன்னுரிமை

‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இந்த அவசர நிதியிடல் வசதியின் கீழானமேலும் படிக்க...
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து சம்பவமொன்று தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று(11) இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. வீதியில் பயணித்த மற்றுமொருமேலும் படிக்க...
தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி – வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர்

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிசார் அராஜகமாக நடந்து கொள்வதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரைமேலும் படிக்க...
பேரிடர் உயிர் இழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
டித்வா புயல் எச்சரிக்கை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை, ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ சவால் விடுத்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்மேலும் படிக்க...
சமூகவலைத் தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை? – ஜனாதிபதி மக்ரோன் அறிவித்த திட்டம்
சிறுவர்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த முடியாதவாறு தடை விதிக்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்தார். நேற்று புதன்கிழமை Brittany நகருக்கு பயணித்திருந்த ஜனாதிபதி மக்ரோன், Ouest-France ஊடகத்தின் ஏற்பாட்டில் 220 இளம் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் 16 வயதுக்கு குறைந்தமேலும் படிக்க...
“தவெகவில் கடுமையாக உழைக்க முடிவு செய்துவிட்டேன்” – செங்கோட்டையன்

“என்னை அரவணைத்துச் செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்தத் தவறும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன். தவெகவில் கடுமையாக உழைக்க முடிவு செய்துவிட்டேன்” என தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்மேலும் படிக்க...

