ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு தப்பிச் சென்றதுடன், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக விசாரணையில் உள்ளார்.
கசிந்த குரல் பதிவுகளின்படி, போராட்டக்காரர்களுக்கு எதிராக “கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த” பாதுகாப்புப் படையினருக்கு ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசினா மறுத்துள்ளார்.
ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த கலவரத்தில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போருக்குப் பிறகு பங்களாதேஷ் கண்ட மிக மோசமான வன்முறை இதுவாகும்.
ஹசீனாவுக்கு 1,400 மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். ” மனித ரீதியாக இது சாத்தியமில்லாததால், குறைந்தபட்சம் ஒன்றையாவது நாங்கள் கோருகிறோம்,” என்று தலைமை சட்டத்தரணி தாஜுல் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளார்.
“ஹசீனாவின் குறிக்கோள், தனக்கும் தனது குடும்பத்திற்கும் நிரந்தரமாக அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதாகும்,” என்று இஸ்லாம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“அவர் ஒரு கடுமையான குற்றவாளியாக மாறிவிட்டார், அவர் செய்த கொடூரத்திற்கு எந்த வருத்தமும் காட்டவில்லை,” என்று சட்டத்தரணி தாஜுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
ஹசீனாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் மற்றும் முன்னாள் பொலிஸ் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோருக்கும் விசாரணைகள் நடைபெற்று வருகிறன.
கமலும் தலைமறைவாக இருப்பதால், அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை மாதம் சவுத்ரி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், அவருக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.
நீதிமன்ற அவமதிப்புக்காக ஹசீனாவுக்கு ஏற்கனவே ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் தனித்தனியாக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...