ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை

ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்காக சபர் சௌசென் என்ற நபர் இந்த தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
இந்தப் பதிவுகள் வன்முறை, குழப்பத்தைத் தூண்டுவதாகவும், துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சர்ச்சைக்குரிய 2022 சைபர் கிரைம் சட்டத்தை மீறுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.
2021 ஜூலை சயீத் அனைத்து பிரிவுகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக பல நபர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
துனிசியாவின் தண்டனைச் சட்டத்தில் மரண தண்டனை இருந்தபோதிலும், சிவில் நீதிமன்றங்கள் எப்போதாவது மரண தண்டனைகளை வழங்கினாலும், 1991 இல் ஒரு தொடர் கொலையாளி தூக்கிலிடப்பட்டதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
பகிரவும்...