Main Menu

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் அடைந்து கொள்ள கலந்துரையாடல்-கள் அத்தியாவசியம் – IVHRD தலைவர்

ஒற்றுமை மற்றும் கலந்துரையாடல்  மூலம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும, உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை அடைவதற்கு கலந்துரையாடல்கள் மிகவும் அவசியம் என சர்வதேச மனித உரிமை அபிவிருத்திக்கான குரல் (IVHRD) தலைவர் ரகு இந்திரகுமார் கூறினார்.

சர்வதேச மனித உரிமை அபிவிருத்திக்கான குரல் (IVHRD) அமைப்பு, கொழும்பு, பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) உலக மனித உரிமை தொடர்பான மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இம்மாநாட்டில் தூதுவர்கள், சட்ட நிபுணர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் வருகை தந்த மனித உரிமை ஆர்வலர்கள் எ பலரும் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும், சிறப்பு விருந்தினர்களால் விக்கேற்றலுடன்  விழா ஆரம்பமானது. இலங்கைக்கான இந்தோனேசிய துணை தூதுவர், சீன மக்கள் குடியரசின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் விஜேசிங்க, இளவரசர் அமிதாப், டாக்டர் சுஷ்மா எஸ். ஆராத்யா, இலங்கை பின்டெக் நிறுவனத்  தலைவர் ராஜ்குமார் கனகசிங்கம், Reliance Innovation நிறுவனர் ஹிரான் விஜேசிங்க, டாக்டர் ரசிதா புத்திக உட்பட மேலும் பலர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து வருகை தந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாகும்.

ஒற்றுமை மற்றும் கலந்துரையால் மூலம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதே எமது நோக்கம் என IVHRD தலைவர் ரகு இந்திரகுமார் தனது வரவேற்புரையில் சுட்டிக்காட்டினார். உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை அடைவதற்கு மேற்படி கலந்துரையாடல்கள் அத்தியாவசியம் என்றும் கூறினார்.

“21ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச இராஜதந்திரம்” என்ற தலைப்பில் நடைபெற்ற குழு விவாதம் இம்மாநாட்டின் பிரதான தலைப்பாக நோக்கப்பட்டது.  ஜனாதிபதி சட்டத்தரணி சரத் விஜேசிங்க மற்றும் ராஜ்குமார் கனகசிங்கம் ஆகிய இருவரின் தலைமையில்  நடைபெற்றது. குறிப்பாக சர்வதேச இராஜதந்திரம், நீதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் தொடர்புகளைப் பற்றி ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடனர். இதன் போது கலந்துகொண்டனர் பிரமுகர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அபிவிருத்திக்கான குரல் (IVHRD) அங்கத்தவர்களின் சந்தேகங்கள் மற்றும்  சர்வதேச மனித உரிமை மீறல் தொடர்பான கேள்விகளுக்கான சர்வதேச நாடுகள் எவ்வாறு கையாள்கின்றன என்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான கௌரவ பணிப்பாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் உலக சமாதான தூதுவர்கள் நியமனம் நிகழ்ச்சியின் இன்னொரு முக்கிய நிகழ்வாக நோக்கப்பட்டது. மனித உரிமை, நீதி மற்றும் சமாதானத்தைக் நிலைநாட்டுவதற்காக  அர்ப்பணிப்பு, தன்னார்வம் கொண்ட நபர்கள் இவ்விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர்.

மாநாட்டில், இராஜ்தந்திரம் மற்றும் நிர்வாகம் தொடர்பான தூர நோக்குப் பார்வைகளை வழங்கும் “மனித உரிமை அபிவிருத்தி முன்னோக்கு  மற்றும் புதிய உலக ஒழுங்கு 22/25 – வெளிநாட்டு கொள்கை பரப்புரை” என்ற வெளியீடும் நடைபெற்றது. முன்னாள் தூதுவர் சரத் விஜேசிங்க மற்றும் அமிலா விஜேசிங்க ஆகியோரால் இந்நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

பகிரவும்...