முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் 98வது பிறந்தநாள் நிகழ்வு
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் 98வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மன்னார்மாவட்ட அரசாங்க அதிபர் முன்னாள் விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நினைவுப் பேருரையை பேராசிரியர் பொன் பாலசுந்தரம் நிகழ்தினார் சிறப்புரையை மறவன்புலவு சச்சிதானந்தன் நிகழ்த்தினார்கள்.
நிகழ்வில் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, எம். கே. சிவாஜிலிங்கம், கலாநிதி கா. விக்னேஸ்வரன், முன்னாள் யாழ். முதல்வர் செல்லன் கந்தையன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சட்டத்தரணி கனக. மனோகரன்(கனடா) மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
தலைவர் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் தென்னிந்தியதிருச்சபை முன்னாள் ஆயர் கலாநிதி ஜெபநேசன் அவர்களது ஐம்பது வருடங்களுக்கும் மேற்பட்ட சமுதாய சேவைக்காக பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
முன்னாள் பா.உ. தர்மலிங்கம் சித்தார்த்தன், பேரின்பநாயகம், இராஜேந்திரன், கௌரிகாந்தன், தங்க முகுந்தன், அகிலன் ஆகியோர் அறக்கட்டளையின் சார்பில் கலந்து சிறப்பித்தமை குறிம்பிடத்தக்கது.
பகிரவும்...