சுற்றுச்சூழலைக் காக்க 1 பில்லியன் மரங்களை நட டென்மார்க் அரசு தீர்மானம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் டென்மார்க் அரசு புதிய பசுமை திட்டத்தை அறிவித்துள்ளது.
626 மில்லியன் யூரோ செலவில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 10% பகுதி காடுகளாக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் 1 பில்லியன் மரங்கள் நாட்டப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, கார்பன் உமிழ்வை குறைத்து, உயிரின பல்வகைமையை பாதுகாத்து, மண் மற்றும் நீர் வளங்களை காப்பாற்றும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மரத் தொழில் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத் திட்டம் யூரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மாற்றத்துக்கு எதிரான பசுமை போராட்டத்தில் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் நிபுணர்கள், “டென்மார்க் எடுத்திருக்கும் இந்தச் செயல் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும்” எனக் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...