Main Menu

குடும்பத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தவர்கள் பாகிஸ்தானில் ஆணவக் கொலை – சந்தேகநபர் கைது

பாக்கிஸ்தானில் குடும்பத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தவர்களை ஆணவக்கொலை செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆண்ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக்கொலை செய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோ வைரலான நிலையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பலோச்சிஸ்தான் மாகாணத்தின் உள்ளுர் பழங்குடி இன பேரவையின் உத்தரவின் பேரிலேயே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என விசாரணைகளின் பின்னர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளம்தம்பதியினர் சுட்டுக்கொல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோவை அடிப்படையாக வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் காணப்படும் வீடியோவில் பாலைவனத்தில் வாகனங்களின்மத்தியில் பெண்ணொருவருக்கு குரான் வழங்கப்படுவதையும்,அதன் பின்னர் அந்த பெண் நபர் ஒருவரிடம் என்னுடன் ஏழு அடி நடந்த பின்னர் நீங்கள் என்னை சுடலாம் என தெரிவிப்பதையும் காணமுடிகின்றது.

அதன் பின்னர் அந்த நபர் அந்த பெண்ணுடன் ஏழு அடிகள் நடக்கின்றார் அதன் பின்னர் அந்த பெண் அந்த நபரிடம் உங்களிற்கு என்னை சுடுவதற்குமாத்திரம்தான் அனுமதி என தெரிவிக்கின்றார்.

அந்த நபர் அதன் பின்னர் கைத்துப்பாக்கியால் அந்த பெண்ணை மூன்றுமுறை சுடுகின்றார்,தன்னை விட்டுவிடுமாறு மன்றாடாத அந்த பெண் நிலத்தில் விழுகின்றார்.

அதன் பின்னர் அவரின் உடலிற்கு அருகில் ஆண்ஒருவரின் இரத்தம் தோய்ந்த உடல் காணப்படுவதை வீடியோ காண்பி;க்கின்றது.

குடும்பத்தினரின் விருப்பமின்றி திருமணம் செய்தவர்களை குடும்பத்தினரின் கௌரம் சமூக அந்தஸ்த்தை காப்பாற்றுவதற்காக ஆணவக்கொலை செய்தல் பாக்கிஸ்தானிலும் அயல்நாடுகளிலும் காணப்படுகி;ன்றது.

பெண்களின் நடத்தையால் குடும்பத்தின் கௌரவம்  பாதிக்கப்பட்டதாக கருதப்படும் சந்தர்ப்பங்களிலும்  ஆணவக்கொலைகள் இடம்பெறுகின்றன.

பாக்கிஸ்தானில் நெருங்கிய குடும்பத்தவர்களால் வருடந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள்ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர்.

பகிரவும்...