Main Menu

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர்

அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

இதேவேளை வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தையும் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கினார்.

‘நோபல் பரிசுக் குழுவிற்கு தான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன் எனவும் அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது எனவும் கூறி அந்த கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார்.

பகிரவும்...