ஏதிலிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – ஈரான்
ஆப்கானிஸ்தான் குடியேறிகள் மற்றும் ஈரானில் தங்கியுள்ள ஏதிலிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் அரசாங்கத்தின் உத்தரவுகளை ஏற்காத எவரையும் உடனடியாக கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானை மேலும் சீர்குலைக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஈரானில் சுமார் 4 மில்லியன் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஏதிலிகள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் ஈரானை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...
