Main Menu

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இந்தியாவிற்கு பயணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கிணங்க அவர் அங்கு செல்லவுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லொவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, தங்களது நாட்டுக்கு பிரவேசிக்குமாறு ரஷ்ய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விளாடிமீர் புட்டினி டம் அழைப்பிதழை கையளித்துள்ளார்.
இந்த அழைப்புக்கமைய விளாடிமீர் புட்டின் இந்தியா செல்லவுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லொவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...