Day: March 28, 2025
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நிலையை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கிறது: எஸ்.ஜெய்சங்கர்

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தியா மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், சர்வதேச மட்டத்தில் அதை எடுத்துச் செல்வதாகவும் நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் நிலை தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பாஜக எம்பிமேலும் படிக்க...
“பெயரை மட்டும் வீராப்பாக வைத்தால் போதாது; செயலிலும் காட்ட வேண்டும்” – முதல்வரை சாடிய விஜய்

“பெயரை மட்டும் வீராப்பாக வைத்தால் போதாது; செயலிலும் காட்ட வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் விஜய். தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது.மேலும் படிக்க...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின்மேலும் படிக்க...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுப் பயணத்தின் போது சம்பூர் சூரிய மின்சார திட்டம்மேலும் படிக்க...
சாமர சம்பத்துக்கு பிணை – வெளிநாடு செல்ல தடை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டிற்கு செல்ல சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் கொழும்புமேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இந்தியாவிற்கு பயணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கிணங்க அவர் அங்கு செல்லவுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லொவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.மேலும் படிக்க...
நாட்டை விடுவித்தவர்கள் குற்றவாளிகள் எனவும், விடுதலைப் புலிகளை அவர்கள் அரசியல் கைதிகள் விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பது நியாயமற்றது – அலிசப்ரி

எங்கள் நாட்டை விடுவித்தவர்களிற்கு தண்டனை விதிக்கும் அதேவேளை குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை அரசியல் கைதிகள் என தெரிவித்து அவர்களை விடுதலைசெய்யவேண்டும் என வேண்டுகோள் விடுப்பது நியாயமற்றது மாத்திரமல்ல ,இது மிகவும் ஒழுக்ககேடானதுஎன முன்னாள் வெளிவிவகார அமைச்சர்மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிப்பு

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மே 3 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சட்டங்களின் படி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை கூட்டாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் 3 ஆம்மேலும் படிக்க...
உடனடித் தேவைகளை தீர்க்கின்ற அளவில் செயற்படுகிறோமா என்பது பற்றி மக்கள் மத்தியில் ஒரு கேள்வி இருக்கிறது – சுமந்திரன்

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்மேலும் படிக்க...
மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகடனம்

மியான்மர் நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சீனா மற்றும் தாய்லாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாங்காக்கில் மக்கள் கட்டடங்களை விட்டு தெருக்களில் கூடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தாய்லாந்து தலைநகர்மேலும் படிக்க...