Main Menu

தேசபந்துவிடம் வாக்குமூலம் பதிவு செய்தது குற்றப் புலனாய்வுப் பிரிவு

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தற்போது சிறையில் உள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகே 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார, நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.
பின்னர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் கடந்த 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கடந்த 20 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் சரணடைந்தார்.
இந்தநிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
பகிரவும்...