வட மசிடோனியாவில் இரவுநேர களியாட்ட விடுதியில் தீ விபத்து – 51 பேர் பலி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வட மசிடோனியாவில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த களியாட்ட நிகழ்ச்சியில் 200 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடுதியில் மேற்கூரையில் தீப்பற்றியதையடுத்து இந்த தீப்பரவல் நிகழ்ந்துள்ளது.
100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.