பி.பி.சி. தமிழ் சேவையின் முன்னாள் ஒளிபரப்பாளர் மூத்த ஊடகர் ஆனந்தி மறைவு

பி.பி.சி. தமிழ் சேவையின் முன்னாள் ஒளிபரப்பாளர் ஆனந்தி சூரியபிரகாசம் காலமானார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் பிபிசி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் செவ்வி எடுத்தவர் என்பதால் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...