Day: February 23, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடத் தீர்மானம்?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி,மேலும் படிக்க...
உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா யுக்ரேன் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்காக 267 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதில் 138 ஏவுகணைகள் யுக்ரேன் விமானப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலினால் யுக்ரேனில் பல பகுதிகளில் பாரிய அளவிலானமேலும் படிக்க...
தெஹியத்த கண்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணை ஒன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வீரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமேலும் படிக்க...
நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகும் இராமேஸ்வரம் மீனவர்கள்
நாளை(24) முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே நடைபெற்ற அவசர மீனவ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. மன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலைமேலும் படிக்க...
மகா கும்பமேளா விமர்சனம்; எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிப் பேசிய மோடி

நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை தொடர்ந்தும் தாக்குவதாகவும், அவர்கள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (23) குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வு குறித்து பல எதிர்க்கட்சி தலைவர்கள்மேலும் படிக்க...
யாழ்.மாவட்ட பதில் செயலாளரின் மகன் பயணித்த வாகனம் விபத்து

யாழ்.மாவட்ட பதில் செயலாளர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகன் காயமடைந்துள்ளார். அதன்படி இன்று யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்தமேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் – உயர்மட்ட குழுவொன்று ஜெனிவாவிற்கு பயணம்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) அன்று ஜெனிவாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நாளை 24ஆம் திகதி திங்கட்கிழமைமேலும் படிக்க...
1971க்குப் பின் நேரடி வர்த்தகத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் – பங்களாதேஷ்

1971 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பின்னர் முதன் முறையாக பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அதிகாரப்பூர்வ அளவில் நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. சர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, இரு நாட்டு அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் பொருட்கள் சேவை கப்பலானது பாகிஸ்தானில் காசிம் துறைமுகத்திலிருந்துமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு

நியூசிலாந்தில் ஒரே இரவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் குறைந்தது ஏழு தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் மிதமான சேதத்தை சந்தித்ததாக நியூஸிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
வதிவிட உரிமை மறுக்கப் பட்டவர்களை நாடுகடத்தும் அவசர அமைச்சரவை ஆலோசனை

முலூஸ் கத்திக் குத்துத் தாக்குதலின் எதிரொலி, வதிவிட உரிமை மற்றும் அகதித்தஞ்சம் மறுக்கப்பட்டவர்களின் தலைவிதியை கேள்விக்குறியாக்கி உள்ளது. முலூசில் தாக்குதல் நடாத்திய – அகதிதத் தஞ்சம் மறுக்கப்பட்ட அல்ஜீரியப் பயங்கரவாதி, பிரான்சில் சட்டவிரோதமாகவே தங்கியிருந்துள்ளான். இதன் எதிரொலியாக, அகதித் தஞ்சம் மற்றும்மேலும் படிக்க...
Mulhouse நகரில் கத்திக்குத்து தாக்குதல்

நேற்றைய தினம் Mulhouse நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பெப்ரவரி 22, சனிக்கிழமை பிற்பகல் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூடிய சந்தைப்பகுதி ஒன்றில் வைத்து ஆயுததாரி ஒருவர் கத்தியால் கூட்டத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஒருவர்மேலும் படிக்க...
மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி

மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தமேலும் படிக்க...
எல்லை தாண்டிய மீனவர்கள் கைதாகின்றமை தொடர்கின்றது

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடிபட்ட 18 இந்திய மீனவர்களே இன்று (23/02/2025) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது – ஹமாஸ்

ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுகிறது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்த போதிலும், இஸ்ரேல் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் பின்னடைவாக விமர்சிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் சனிக்கிழமை ஆறுமேலும் படிக்க...
பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அண்மைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்குமேலும் படிக்க...
சமத்துவமற்ற சமூக அமைப்பின் விளைவே ஊழல்களும் மோசடிகளும்: பிரதமர்

நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சமத்துவத்தை அடிப்படையாக்கொண்ட சமூகத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகியுள்ளது. இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வரத் தற்போது எமக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசியல் மற்றும்மேலும் படிக்க...
பி.பி.சி. தமிழ் சேவையின் முன்னாள் ஒளிபரப்பாளர் மூத்த ஊடகர் ஆனந்தி மறைவு

பி.பி.சி. தமிழ் சேவையின் முன்னாள் ஒளிபரப்பாளர் ஆனந்தி சூரியபிரகாசம் காலமானார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் பிபிசி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவுமேலும் படிக்க...