Main Menu

உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை கையளித்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு தன்னிடம் பணயக்கைதிகளாகயிருந்தவேளை உயிரிழந்த நான்கு இஸ்ரேலியர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.

உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்துள்ளமை இதுவே முதல்தடவை.

செஞ்சிலுவை சங்கம் தற்போது அந்த உடல்களை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றது.

பிபாஸ் குடும்பத்தை சேர்ந்த தாய் தாய் ஒன்பது மற்றும் நான்கு மாத குழந்தைகளின் உடல்களையும் ஹமாஸ் கையளித்துள்ளது.

பகிரவும்...
0Shares