சீனாவில் திருமணங்கள் ஐந்தில் ஒரு பங்கு வீழ்ச்சி

கடந்த ஆண்டு சீனாவில் திருமணங்கள் ஐந்தில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு திருமணத்திற்குப் பதிவு செய்த தம்பதிகளின் எண்ணிக்கை 6.1 மில்லியனாகவும்,2023ஆம் ஆண்டு 7.68 மில்லியனாக இருந்ததாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிக செலவு காரணமாக திருமணம் செய்து கொள்ளவதற்கான ஆர்வம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை என்பவற்றின் காணரமாகவும் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் காட்டவில்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடந்த ஆண்டு 2.6 மில்லியனுக்கும் அதிகமான தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாகவும், இது 2023 ஆம் ஆண்டை விட 1.1% அதிகமாகும் என்றும் தரவுகள் குறிப்பிடுகின்றன.